\
‘கண்ணகியாக நடிக்க ஆசை’ - கங்கனா ரனாவத்

‘கண்ணகியாக நடிக்க ஆசை’ - கங்கனா ரனாவத்

‘கண்ணகியாக நடிக்க ஆசை’ - கங்கனா ரனாவத்
Published on


மதுரையை எரித்த கண்ணகியின் கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகி வரும் "தலைவி" திரைப்படத்தில், ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

இத்தப் படத்திற்காக கங்கனா தமிழ் மற்றும் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தி்ன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலப்பதிகார காப்பியத்தின் தலைவியான, நீதி தவறியதற்காக மதுரையை எரித்த கண்ணகி குறித்த கதையை தயார் செய்யுமாறு இயக்குநர் எ.எல்.விஜய்யிடம் கங்கனா ரனாவத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கணவனுக்காக நீதி கேட்டு போராடிய கண்ணகி கதாப்பாத்திரம் கங்கனா ரனாவத்தை பெரிதும் கவரவே தான் அதில் நடிக்க ஆசைப்படுவதாக ஏ.எல்.விஜய்யிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com