ரஜினிகாந்திற்கு அடுத்து தனுஷை இயக்கும் நெல்சன்? - கசியும் தகவல்கள்

ரஜினிகாந்திற்கு அடுத்து தனுஷை இயக்கும் நெல்சன்? - கசியும் தகவல்கள்
ரஜினிகாந்திற்கு அடுத்து தனுஷை இயக்கும் நெல்சன்? - கசியும் தகவல்கள்

நடிகர் ரஜினிகாந்தின் படத்திற்கு அடுத்து, தனுஷை வைத்து புதியப் படம் ஒன்றை நெல்சன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இதையடுத்து 3-வது படமாக நடிகர் விஜயின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததால், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

இதற்கிடையில் இந்த பட வெளியீட்டிற்கு முன்பே, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ பட அறிவிப்பும் மாஸாக வெளியானது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த 13-ம் தேதி வெளியான ‘பீஸ்ட்’ படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்யாததால், இந்தப் படத்திற்கு கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதனால் நடிகர் ரஜினிகாந்த், ‘தலைவர் 169’ படத்திற்கு மாற்று இயக்குநரை தேடுவதாகவும் தகவல் வெளியானது. அதற்கேற்றார்போல், நெல்சனின் ட்வீட்டர் பக்கத்தில், ‘தலைவர் 169’ பட தகவல் எடுக்கப்பட்டிருந்தது. பின்னர் சிறிதுநேரத்திற்குப் பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ‘தலைவர் 169’ படத்தை நெல்சன் இயக்குவதை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் தனுஷை வைத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷிற்காக ஒரு கதையை, நெல்சன் உருவாக்கி வைத்திருந்ததாகவும், அந்தக் கதையின் ஒன்லைனை தனுஷிடம் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், நடிகர் தனுஷ் கைநிறைய படங்கள் வைத்துள்ளதால், நெல்சன் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது நடிகர் தனுஷ் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும், செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படம் இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இதற்கு அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும், பாதியில் நின்றுபோன தனது படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படங்களுக்குப் பிறகு தான் நெல்சன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள. இருப்பினும் நெல்சனுடன் தனுஷ் பணியாற்றபோவது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகநிலையில், சில தினங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com