\
‘புஷ்பா’ வெற்றி: அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரம்லோ' ஜனவரி 26-ல் இந்தியில் வெளியீடு

‘புஷ்பா’ வெற்றி: அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரம்லோ' ஜனவரி 26-ல் இந்தியில் வெளியீடு

‘புஷ்பா’ வெற்றி: அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரம்லோ' ஜனவரி 26-ல் இந்தியில் வெளியீடு
Published on

‘புஷ்பா’ வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரம்லோ' இந்தியில், வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாக உள்ளது.

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜுன், சமீபத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘புஷ்பா : தி ரைஸ் பார்ட் ஒன்’. இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே யூடியூப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட நிலையில், வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது. படம் நீளமாக உள்ளது என்றாலும், அல்லு அர்ஜுனின் வித்தியாசமான தோற்றம் மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

குறிப்பாக இந்தப் படம் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வடஇந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பாலிவுட் கதாநாயகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் அல்லு அர்ஜுனின் கெட்டப்பை போன்று, தங்களின் கெட்டப்பையும் மாற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனால், வட இந்தியாவில் அல்லு அர்ஜுனின் மார்கெட் உயர்ந்துள்ளது. ‘புஷ்பா’ படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படத்தையும் இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளது.

2020-ம் ஆண்டு ஜனவரியில், மகர சங்ராந்தியை முன்னிட்டு அல்லு அர்ஜுனின் நடிப்பில், திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' தெலுங்கு திரையுலகம் மட்டுமில்லாது, தென்னிந்தியாவில் பட்டையை கிளப்பியது. நெட்பிளிக்ஸில் 2020-ல் அதிகளவு பார்வையாளர்களை கொண்ட படங்களில்'அலா வைகுந்தபுரம்லோ' படமும் ஒன்றாகும். தற்போது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருவதால், ஜனவரி 26 குடியரசு தினவிழாவை முன்னிட்டு, இந்தியில் 'அலா வைகுந்தபுரம்லோ' படம் வெளியாக உள்ளது. இதனால் அல்லு அர்ஜுனி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com