”PS1-ஐ அடுத்து சிறந்த படம் நடிக்கணும்னா தனி ஒருவன் - 2 தான் பண்ணனும்” - ஜெயம் ரவி

”PS1-ஐ அடுத்து சிறந்த படம் நடிக்கணும்னா தனி ஒருவன் - 2 தான் பண்ணனும்” - ஜெயம் ரவி

”PS1-ஐ அடுத்து சிறந்த படம் நடிக்கணும்னா தனி ஒருவன் - 2 தான் பண்ணனும்” - ஜெயம் ரவி
Published on

பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “எனக்கு இயல்பாகவே சுருட்டை முடி. இப்படத்திற்காக நீளமாக முடி வளர்க்க வேண்டும். இதற்கு மேல் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது என்று, அதை ஸ்லோவ் மோஷனில் நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன்.

இதன் பிறகு சிறப்பாக என்ன செய்ய போகிறாய்? என்று அண்ணன் கூட கேட்டான். அதற்கு நான் ‘நீ தனி ஒருவன் - 2 இயக்கு’ என்று கூறினேன். ஆனாலும், எனக்கும் அது தான் தோன்றியது. இதைப் பற்றி மணி சாரிடமும் கேட்டேன். அதற்கு அவர், இதைவிட சிறப்பாக ஒன்றை செய்வாய் என்று கூறினார். இதை விட நல்ல படம் பண்ண முடியுமா என்று தெரியவில்லை.

ஆனால், இப்படத்தில் கற்று கொண்ட அனுபவங்களைக் கொண்டு இனி எது செய்தாலும் சிறப்பாக செய்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் சோர்வடையும் போதெல்லாம் மணி சாரை பார்ப்போம். அவர் ஓடிக்கொண்டே இருப்பார். அவரே இடைவிடாமல் செயல்படும் போது நமக்கு என்ன என்று சுறுசுறுப்புடன் பணியாற்ற சென்று விடுவோம்” என்றார்.

- ஜான்சன்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com