சினிமா
புருவ அழகியை பின்னுக்குத் தள்ளிய பரோட்டோ அழகி: வைரல் வீடியோ
புருவ அழகியை பின்னுக்குத் தள்ளிய பரோட்டோ அழகி: வைரல் வீடியோ
மலையாள நடிகை ஒருவர் ஓட்டல் கடை ஒன்றில் பரோட்டா பிசையும் வீடியோ வைரகாக பரவி வருகிறது.
மலையாள சினிமா நடிகைகளுக்கும் வைரல் வீடியோவிற்கு என்ன சம்பந்தமோ தெரியவில்லை. புருவத்தை வில்லாக வளைத்ததால் ஒரே இரவில் இந்தியா முழுவதும் வைரலானார் ப்ரியா வாரியர். அதனை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் இப்போதுதான் அமைதியாக அடங்கினார்கள். அதற்குள் இன்னொரு வைரல் வீடியோவை வாரி வழங்கி இருக்கிறார் மலையாள நடிகை நிமிஷா. ‘தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும்’ படத்தில் நடித்தவர். இவர் கிராம பகுதியிலுள்ள பரோட்டா கடைக்குச் சென்று மைதா மாவை பிசைந்து பரோட்டா அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் மிக லாவகமாக அவர் பரோட்டாவை சுட்டு போடுகிறார். புருவ அழகியை பின்னுக்குத் தள்ளி சமூக வலைதளத்தில் இப்போது பரோட்டோ அழகி முந்தி வந்திருக்கிறார்.