\
காலா படத்தில் நெருப்புடா பாடகரின் புதிய பாடல்

காலா படத்தில் நெருப்புடா பாடகரின் புதிய பாடல்

காலா படத்தில் நெருப்புடா பாடகரின் புதிய பாடல்
Published on: 

ரஜினி நடித்து வரும் காலா படத்தில் நெருப்புடா பாடகர் அருண் காமராஜ் ஒரு புதிய பாடலை எழுதியுள்ளார்.

பாடலாசிரியர், பாடகர், நடிகர் என பல முகம் கொண்டவர் அருண் காமராஜ். இவர் இப்போது இயக்குநராகவும் அறிமுகமாகி இருக்கிறார். பாடல் எழுதுவதை போலவே பாடுவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். கபாலியில் இவர் பாடிய ‘நெருப்புடா’பாடல் பெரிய அளவுக்கு புகழ் பெற்றது. இதனை தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்து குவிந்தன. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் காலா படத்தில் ரஜினிக்காக ஒருபாடலை எழுதியிருக்கிறார் அருண். இதை அவர் இப்படை வெல்லும் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல் பாடல் பெரிய வெற்றியை சம்பாதித்து கொடுத்ததால் மீண்டும் இந்தக் கூட்டணியில் ஒரு பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com