\
‘மாநாடு’ படத்திற்கு பதிலாக ‘மகா மாநாடு’ - டி ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு 

‘மாநாடு’ படத்திற்கு பதிலாக ‘மகா மாநாடு’ - டி ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு 

‘மாநாடு’ படத்திற்கு பதிலாக ‘மகா மாநாடு’ - டி ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு 
Published on

‘மாநாடு’ படத்திற்கு பதிலாக ‘மகா மாநாடு’ - டி ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு 

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த ‘மாநாடு’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்தது. இதற்காக நடிகர் சிம்புவும் வெளிநாடுகளில் தங்கி உடல் எடையைக் குறைத்து வந்ததாக கூறப்பட்டது.
 
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு எதிர்பாராத சில காரணங்களால் படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அத்துடன் படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வேறோரு நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் உருவாக்கப்படுமென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இதனால் அதிருப்தியான ரசிகர்கள் சிம்புவிடம் கேள்விக்கேட்கும் வண்ணம் டிவிட்டரில் #IrresponsibleSTRdisgraceHisFans மற்றும் #STRmustBeAnswerableToHisFans போன்ற ஹேஷ்டேக்குகளை டிரண்ட் செய்தனர். 

தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மாநாடு படத்திற்கு பதிலாக ‘மகா மாநாடு’ என்றப் படத்தை அறிவித்துள்ளார் டி.ராஜேந்தர். இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி படத்தை இயக்கவும் உள்ளார். மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் தயாரிக்கிறார். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com