பாகுபலி -2 பிரபாஸை உச்சத்திற்கு உயர்த்திச் சென்றிருக்கிறது. மார்க்கெட் உயரவே தற்போது தனது சம்பளத்தை 75 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார்.
தெலுங்கு ஹீரோவாக இருந்து இந்திய ஹீரோவாக மாறிய பிறகு ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் பிரபாஷுக்கு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்தான் கான் ஹீரோக்களுக்கு இணையாக அவர் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது பாகுபலி வெற்றிக்குப்பிறகு ஹிந்தி தயாரிப்பாளர்கள் பலரும் பிரபாஸ் கேட்கும் சம்பளத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’எந்த நடிகரும் இப்படி உடனடியாக பல மடங்கு சம்பளத்தை உயர்த்தியது இல்லை. ஆகையால் பிரபாஸ் சம்பள விஷயத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். பாகுபலி வெற்றியால் அவர் சம்பளத்தை உடனடியாக அதிகரிப்பது அவரது கேரியருக்கு நல்லதல்ல ‘ எனக்கூறுகிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

