\
அப்போ அஜித்... இப்போ விஜய்.. மனம் திறந்த சூரி!

அப்போ அஜித்... இப்போ விஜய்.. மனம் திறந்த சூரி!

அப்போ அஜித்... இப்போ விஜய்.. மனம் திறந்த சூரி!
Published on: 

அஜித், விஜய் படங்களில் நடிப்பவர்கள் அவர்களுடனான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அதிக ஆர்வம் காட்ட தவறியதில்லை. அந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் சூரி.

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் அவர் சமீபத்தில் அஜித்தை பற்றி புகழ்ந்திருந்தார்.

“ஜி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தேன். அதை பார்த்துவிட்டு நீ பெரிய நகைச்சுவை நடிகராக வருவாய் என அஜித் பாராட்டினார். அவருடன் வேதாளம் படத்தில் முழு நீள காமெடியனாக நடித்து விட்டேன்” என அவர் தெரிவித்து இருந்தார்.

தற்போது விஜயைப் பற்றி புகழ்ந்துள்ள சூரி “ஜில்லா படத்தில் நடிப்பதற்கு முன் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தேன். மற்றவர்கள் நடிக்கும் போது அதைப் பார்த்து விஜய் மிகவும் ரசிப்பார். நான் முதன்முதலாக கார் வாங்கியபோது விஜய் சாரிடம் கொடுத்துத்தான் முதலில் ஓட்ட சொன்னேன். அவரும் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அதோடு இதைவிட பெரிய காரை விரைவில் வாங்க வேண்டும் என்றும் வாழ்த்தினார். விஜய் எல்லோரும் சொல்வது போல் மிகவும் நல்ல மனிதர்” எனக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com