சினிமா
தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் தியேட்டரில் வெளியாகவிருந்த ‘ஏலேய்’ திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார் இயக்குநர் ஹலீதா ஷமீம். இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தன. இவர், தற்போது இயக்கியுள்ள ’ஏலேய்’ படத்திற்கு இதனால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதில், சமுத்திரகனி நாயகனாக நடித்துள்ளார். இப்படம் தியேட்டர்களில் நாளை வெளியாகவிருந்த நிலையில், வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி பல்வேறு விதிமுறைகளைக் காரணம் காட்டி தனியார் தொலைக்காட்சியில் பிப்ரவரி 28ம் தேதி அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.