பாகுபலி எல்லாம் ஒரு படமா? : அடூர் கோபாலகிருஷ்ணன்

பாகுபலி எல்லாம் ஒரு படமா? : அடூர் கோபாலகிருஷ்ணன்

பாகுபலி எல்லாம் ஒரு படமா? : அடூர் கோபாலகிருஷ்ணன்
Published on

பாகுபலி 2 எல்லாம் ஒரு படமா, அதற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்று பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பிரபல திரைப்பட இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர்,  "பாகுபலி எல்லாம் ஒரு படமா, இந்த மாதிரியான படத்திற்காக பத்து ரூபாய் கூட நான் செலவு செய்யமாட்டேன். பழைய படமான பாதாள பைரவிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இந்த மாதிரியான படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க கூடாது" என தெரிவித்துள்ளார். இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அடூர் கோபாலகிருஷ்ணன் 2 முறை தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com