“என் முதல் தமிழ்ப் பாடலை பாடிவிட்டேன்” - அதிதி ராவ் மகிழ்ச்சி

“என் முதல் தமிழ்ப் பாடலை பாடிவிட்டேன்” - அதிதி ராவ் மகிழ்ச்சி
“என் முதல் தமிழ்ப் பாடலை பாடிவிட்டேன்” - அதிதி ராவ்  மகிழ்ச்சி

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வரும் ‘ஜெயில்’ படத்தில்  அவருடன் இணைந்து இந்தி நடிகை அதிதி ராவ் டூயட் பாடலை பாடியுள்ளார். 

பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான‘காற்று வெளியிடை’ மூலம் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு தமிழில் ஏதும் அவருக்கு படம் வெளியாகவில்லை. ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தில் ஒருசிறு கதாபாத்திரத்தில் வந்து போனார் அதிதி. 

தனக்கு நடிப்பது மட்டுமல்லாமல் பாடல் பாடுவதிலும் விருப்பம் உண்டு என்று அதிதி ராவ் பல இடங்களில் தெரிவித்துள்ளார். ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் படம் ப்ரமோஷனின் போதுகூட பல பாடல்களை பாடி அசத்தினார். இந்நிலையில் அவரது பாடல் பாடும் ஆசையை நிறைவேற்றியுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வரும் ‘ஜெயில்’ படத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடியுள்ளார் அதிதி ராவ்.  இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜிவி பிரகாஷ் ‘காத்தோடு’ என்று தொடங்கும் பாடலை தமிழில் தன்னுடைய முதல் பாடலாக பாடியுள்ளார் அதிதி. பாடலை கேட்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com