\
விஜய் அதிரிந்தி 9ம் தேதி ரிலீஸ்

விஜய் அதிரிந்தி 9ம் தேதி ரிலீஸ்

விஜய் அதிரிந்தி 9ம் தேதி ரிலீஸ்
Published on

விஜய்யின் அதிரிந்தி வரும் 9-ம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. 

விஜய் நடித்த படத்திலேயே அதிக எதிர்ப்புகளை சந்தித்த திரைப்படம் மெர்சல். தமிழில் வெளிவந்த வேகத்தில் அந்தத் திரைப்படம் பெரும் வெற்றியை சம்பாதித்தது. அதனை தொடர்ந்து விஜய், படக்குழுவினருக்கு சக்சஸ் விருந்து வைத்து அசத்தினார்.அதோடு மெர்சல் மேங்கிங் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கில் தேதி அறிவிக்கப்பட்டு பின் திரும்ப பெற்ற மெர்சலின் தெலுங்கு பகுதியான அதிரிந்தி வரும் 9ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. தமிழை போலவே தெலுங்கிற்கும் யு/ஏ சான்று கிடைத்துள்ளது. ஆகவே ஆந்திரா,தெலங்கானாவில் படம் வெளியாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com