இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை கரம்பிடித்த நடிகர் பிரபுவின் மகள்... திரையுலகினர் வாழ்த்து!

பிரபுவின் மகள் ஐஸ்வர்யா - திரைப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஜோடிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரபுவின் மகள் திருமணவிழா
பிரபுவின் மகள் திருமணவிழாpt web

த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் மணம் முடித்துள்ளார்.

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷால், லெஜண்ட் சரவணன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இதனிடையே, நட்சத்திர ஜோடியான ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யாவுக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரபுவின் மகள் திருமணவிழா
Fight Club | மேக்கிங் செம்ம... ஆனா படம்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com