ரோட்டுக்கடையில நம்ம அடா, அடடா!

ரோட்டுக்கடையில நம்ம அடா, அடடா!

ரோட்டுக்கடையில நம்ம அடா, அடடா!
Published on

ரோட்டுக்கடையில் பானிப்பூரி சாப்பிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார் நடிகை அடா சர்மா.

சிம்பு நடித்த ’இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை அடா சர்மா. இப்போது ’கமாண்டோ 2’என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட அடாவின் அப்பா, மதுரையை சேர்ந்தவர். அடா, பானிப்பூரி பிரியை. அதுவும் ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவது இவரது வழக்கம். மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்ற அடா சர்மாவுக்கு திடீரென்று பானி பூரி ஆசை. ரோட்டுக்கடையை பார்த்தவர், காரில் இருந்து இறங்கி அங்கு ருசித்து சாப்பிட்டார். அப்போது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் விரைவாகச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com