\
“நடிகைகள் நடித்தால் போதாது; விளம்பர நிகழ்ச்சிக்கும் வரவேண்டும்”- தயாரிப்பாளர் தனஞ்செயன்

“நடிகைகள் நடித்தால் போதாது; விளம்பர நிகழ்ச்சிக்கும் வரவேண்டும்”- தயாரிப்பாளர் தனஞ்செயன்

“நடிகைகள் நடித்தால் போதாது; விளம்பர நிகழ்ச்சிக்கும் வரவேண்டும்”- தயாரிப்பாளர் தனஞ்செயன்
Published on: 

நடிகைகள், தங்கள் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் தனஞ்செயன் பேசியுள்ளார்.

‘கோடியில் ஒருவன்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் அவர் இதுபற்றி பேசுகையில், “நடிகைகள் படங்கள் மட்டும் நடித்துக்கொண்டிருந்தால் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல முடியும். நடிகைகள் திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும்” என்றார் அவர்.

இன்றைய சினியுலகில், லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா உட்பட நிறைய நடிகைகள் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இதை மறைமுகமாக குறிக்கும் வகையில், தனஞ்செயன் இக்கருத்தை முன்வைத்திருப்பதாக விவாதங்கள் வருகின்றன.

- செந்தில்ராஜா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com