\
தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகைகள் மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா ராஜேஷ்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகைகள் மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா ராஜேஷ்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகைகள் மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on: 

நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில், நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதனால், தடுப்பூசி குறித்த மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மாளவிகா மோகனன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

‘யுத்ரா’ பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் மாளவிகா மோகனன் தனது படக்குழுவினருடன் மும்பையிலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அப்போலோ மருத்துவமனையிலும் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com