\
”90 நாட்களுக்குப் பிறகு குழந்தையைப்போல நடக்கிறேன்” - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ

”90 நாட்களுக்குப் பிறகு குழந்தையைப்போல நடக்கிறேன்” - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ

”90 நாட்களுக்குப் பிறகு குழந்தையைப்போல நடக்கிறேன்” - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ
Published on: 

90 நாட்களுக்குப்பிறகு நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவர்கள் உதவியுடன் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில், யாஷிகாவின் தோழி பவானி உயிரிழந்த நிலையில், மற்ற 2 நண்பர்களுடன் யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடல் முழுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், விபத்துக்குப் பிறகு 90 நாட்கள் கழித்து முதல் முறையாக யாஷிகா ஆனந்த் மருத்துவர்கள் உதவியுடன் கம்பியைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் நடக்கும் வீடியோவைக் காண: https://twitter.com/iamyashikaanand/status/1454043173135601669?s=20

இதனை உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”குழந்தைப்போல் பாதத்தை தரையில் பதித்தேன். 95 நாட்கள் பிராத்தனை மற்றும் நம்பிக்கைக்கு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதில் பெரிய மகிழ்ச்சி.

மூன்று மாதங்களுக்குப் பிறகு என் கால் விரல்களில் வலுவாக நின்றேன். விரையில் ஆதரவு இல்லாமல் தனியாகவே நிற்பேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com