\
’நடிக்கக்கூடாது...’நடிகைக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்!

’நடிக்கக்கூடாது...’நடிகைக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்!

’நடிக்கக்கூடாது...’நடிகைக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்!
Published on

ப்ரேம் குமார் இயக்கும் 96 படத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிறார், யானும் தீயவன், இவன் யாரென்று தெரிகிறதா, ஆகிய படங்களில் நடித்துள்ளார் வர்ஷா போல்லம்மா. 

இதுகுறித்து அவர் கூறும்போது,’நான் 96 படத்தில் நாயகியாக நடிக்கவில்லை. ஆனால் இந்தப்படத்தில் எனது ரோல் பேசப்படும். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் சிறப்பான வாய்ப்பு அமைத்துள்ளது. அவர் ஒரு சிறந்த மனிதர். அவரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்தபோதுதான் அவை அனைத்தும் உண்மை என்பதைத் தெரிந்துகொண்டேன். 

கேமராவுக்கு முன்னாள் அவர் தனித்திறமை வாய்ந்த நடிகர். வசனங்களை தேவையின்றி திணித்து பேசமாட்டார். அவர், என்னிடம்’எப்போதும் நடிக்கக் கூடாது. காட்சிக்கும், சிச்சுவேசனுக்கும் தகுந்தாற்போல கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு இயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்’ எனத் தெரிவிப்பார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். தனிப்பட்ட முறையில்  அவர் மிகமிக அமைதியானவர். ஷூட்டிங் முடிந்த பிறகு யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்காமல் கிளம்பிச் சென்று விடுவார்’ என்கிறார் வர்ஷா போல்லம்மா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com