நடிகை வித்யுலேகா ராமன் திருமண புகைப்படத் தொகுப்பு

நடிகை வித்யுலேகா ராமன் திருமண புகைப்படத் தொகுப்பு

நடிகை வித்யுலேகா ராமன் திருமண புகைப்படத் தொகுப்பு
Published on

நடிகை வித்யுலேகா ராமன் திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜீவா - சமந்தா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வித்யுலேகா ராமன்.

இவர், நடிகர் மோகன் ராமன் மகள். இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

’ஜில்லா’,’தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரம்’, ’வேதாளம்’,’காக்கி சட்டை’, ‘மாப்ள சிங்கம்’, ’புலி’ உள்ளிட்ட அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களில் படங்களில் காமெடி நடிகையாக நடிப்பில் கவனம் ஈர்த்துள்ளார்.

குறிப்பாக, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக, தற்போது தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். அங்கும் முன்னணி நகைச்சுவை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வித்யுலேகா ராமன் சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தற்போது, இவர்களின் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும் வித்யுலேகாவின் காஸ்டியூம்கள் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com