\
#Metoo பிரசாரம்.. என்ன சொல்கிறார் நடிகை வரலட்சுமி..?

#Metoo பிரசாரம்.. என்ன சொல்கிறார் நடிகை வரலட்சுமி..?

#Metoo பிரசாரம்.. என்ன சொல்கிறார் நடிகை வரலட்சுமி..?
Published on: 

சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் #Metoo பிரசாரத்திற்கு நடிகை வரலட்சுமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் இணையத்தில் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் குறித்தும் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சினிமா, பத்திரிகை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்களும் தினம் தினம் ட்விட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பாடகி சின்மயி சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அவருக்கு பதிலளித்து சில பெண்களும் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பதிவிட்டு இருந்தனர். அவர்களது பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி பகிர்ந்திருந்தார். சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் #Metoo பிரசாரத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகை வரலட்சுமியும் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வரலட்சுமி ''முன்னெப்போதும் இல்லாத வகையில், பாலியல் வன்முறைகள் குறித்து பெண்கள் பேசுவது வரவேற்கத்தக்கது. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com