நடிகை வரலட்சுமி மற்றும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கு மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்திலும், மலையாளத்தில் தயாராகி வரும் கலர்ஸ் படத்திலும், தெலுங்கில் சபரி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிகோலய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்றும், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.