\
ஆதரவற்றக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை வாணி போஜன்

ஆதரவற்றக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை வாணி போஜன்

ஆதரவற்றக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை வாணி போஜன்
Published on

நடிகை வாணி போஜன் தீபாவளியை ஆதரவற்றக் குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்.

நடிகை வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் வெளியானது. சசிக்குமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’, விக்ரமுடன் ‘மகான்’, விக்ரம் பிரபுவுடன் ‘பாயும் ஒளி நீ எனக்கு’, வைபவ்வுடன் பெயரிடாதப்படம், நடிகர் பரத்துடன் பெயரிடாதப்படம்  என பல்வேறு படங்களில் நடித்து  வருகிறார்.

பிஸியான சூழலிலும் தீபாவளி பண்டிகையை உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்றக் குழந்தைகளுடன் உற்சாகமுடன் கொண்டாடியிருக்கிறார். இந்நிகழ்வில் பங்கேற்ற வாணி போஜன், ”இந்த தீபாவளி கொண்டாட்டம் எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. இன்று இந்த குழந்தைகளுடன் நேரத்தை செலவிட கிடைத்துள்ளது. அனைவரும் தங்கள் தீபாவளியை வசதியற்ற மற்றும் ஆதரவற்ற மக்களுடன் கொண்டாட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com