“ நீங்க வாழ மாட்டை கொல்ல வேண்டிய அவசியம் இல்ல... கோமியத்தை...’ - வெளியானது 'ஒடேலா 2 ’ ட்ரெய்லர் !
தமிழ் மொழியில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாது தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னனி நடிகையாக பிசியாக நடித்து வரும் தமன்னா தற்போது நடித்து முடித்துள்ள படம்தான் ஒடேலா 2.. ஓடிடியில் நல்லதொரு வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் முதல் பாகம், உண்மைக்கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டது.
இந்நிலையில்தான் இதன் இராண்டம் பாகம் தற்போத் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தை சம்பத் நந்தி எழுத அசோக் தேஜா இயக்க, ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் நடித்துள்ளனர்.. ‘காந்தாரா’ புகழ் அஜனேஷ் லோக்நாத் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் இதன் டீசர் வெளியாகி எதிர்ப்பார்ப்பை எகிர வைத்தாலும், தற்போது வெளியாகியிருக்கும் டீசர், ’ இந்த படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறும் என்றும், சர்ச்சையில் சிக்கும் ‘ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். காரணம், ட்ரெய்லரில் இருக்கும் தமிழ் வசனங்கள்தான்.
“விஷக்காற்றா மாறி ஒடேலாவை சுத்தி வளைப்பேன்” “ஊரை தாக்குறதுக்கு முன்னாடி அந்த விஷத்தை முழுங்கிருவேன்”. ”நாம நிக்கிறதுக்கு தேவை கோமாதா, வாழ்றதுக்கு தேவை கோமாதா”, ”நீங்க வாழ மாட்டை கொல்ல வேண்டிய அவசியம் இல்ல, அதோட கோமியத்தை குடிச்சு கூட பொழைச்சிக்க முடியும்” இப்படியாகவே ட்ரெய்லர் முழுக்க வசனங்கள் வருகின்றன.
ஒடேலா என்ற கிராமத்தில் இருக்கும் மனிதர்களை குறிப்பாக பெண்களை தீய ஆத்மா ஒன்று துன்புறுத்துகிறது. இதனை தடுக்கும் பேராற்றல் கொண்டவராக தமன்னா வருகிறார்.. இப்படியாக படத்தின் கதைக்களம் அமைய ‘ஒடேலா’ வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.