‘நாடு எங்கே செல்கிறது ’ .. ஆத்திரத்தில் கொதித்த தமன்னா..!

‘நாடு எங்கே செல்கிறது ’ .. ஆத்திரத்தில் கொதித்த தமன்னா..!
‘நாடு எங்கே செல்கிறது ’ .. ஆத்திரத்தில் கொதித்த தமன்னா..!

பெண்கள் மீது அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வேதனை தெரிவித்துள்ள நடிகை தமன்னா ‘நாடு எதனை நோக்கி செல்கிறது’ என ஆத்திரத்தில் கொதித்துள்ளார்.

தமிழில் அதிகப்படியான படங்களில் நடித்த தமன்னாவிற்கு தற்போது கைவசம் படம் ஏதும் இல்லை. ஆனால் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாட்டில் பெண்கள் மீது அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வேதனை தெரிவித்து நடிகை தமன்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு இடத்திலோ 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு எதிராக போராடிய அவரது தந்தை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளியை பாதுகாக்கும் பொருட்டு இது நடைபெற்றிருக்கிறது. நம் நாடு எதை நோக்கி செல்கிறது. இன்னும் எத்தனை எத்தனை நிர்பயாக்கள் தங்களது வாழ்வை தியாகம் செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு மனநிலையில் பின்னடைவை கொண்டதாகும். அந்த மனநிலைக்கு முதலில் சிகிச்சையளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com