சினிமா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமன்னா சாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமன்னா சாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுடன் வரிசையில் நின்று நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வளாகத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து 5 தீயணைப்பு வண்டிகள் மூலம் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழக்கம்போல பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை தமன்னா இன்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்வதற்காக அவர் பத்கர்களுடன் பக்தராக நீண்ட நேரம் வரிசையில் நின்று பின் சாமி தரிசனம் செய்தார்.