\
நடிகை தமன்னாவுக்கு டாக்டர் பட்டம்!

நடிகை தமன்னாவுக்கு டாக்டர் பட்டம்!

நடிகை தமன்னாவுக்கு டாக்டர் பட்டம்!
Published on: 

நடிகை தமன்னா கெளரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். 

திரையுலகில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே கௌர டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஐஏசி எனப்படும் கான்ஃபெடரேசன் ஆஃப் இண்டர்நேசனல் அக்ரெடிடேசன் கமிசன் என்கிற அமைப்பு தமன்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருக்கிறது. இந்தப்பட்டத்தை அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் அவர் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘சிஐஏசி அமிப்பு வழங்கிய கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கெளரவத்திற்கு நியாயமாக செயல்படுவேன்’எனத் தெரித்துள்ளார். 

ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் அவர் தற்போது, விக்ரமுடன் இணைந்து ஸ்கெட்ச், பிரபுதேவாவுடன்  காமோஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com