விகாஷ் துபே என்கவுன்ட்டர்:  பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி!!

விகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி!!

விகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி!!
Published on

ரவுடி விகாஷ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகை டாப்சி கருத்து தெரிவித்துள்ளார்

8 போலீசார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி விகாஷ் துபே மத்திய பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி கோயிலுக்குச் சென்ற விகாஷ் துபேவை அங்குள்ள பாதுகாவலர்கள் அடையாளம் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு விகாஷ் துபேவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று விகாஷ் துபேவை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்தனர். விகாஷை அழைத்துச் செல்லும்போது கார் விபத்திற்குள்ளாகியதாக தெரிகிறது. இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், கார் விபத்துக்குள்ளான சமயத்தில் காயமடைந்த போலீசார் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி விகாஷ் சுடத் தொடங்கினார். அத்துடன் அவர் தப்பிக்கவும் முயன்றார். தப்ப முயன்றவரை போலீசார் சுட்டபோது அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த என்கவுன்ட்டருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்களும் பதிவாகியுள்ளன. பல அரசியல்வாதிகளின் பெயர்கள் விகாஷுடன் இணைத்து பேசப்பட்ட நிலையில் அவரை திட்டமிட்டு போலீசார் கொன்றுவிட்டதாக பலர் பதிவிட்டு வருகின்றனர். யாரோ சில அரசியல்வாதிகளை காப்பாற்ற நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் இதுவென சிலர் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பதிவிட்டுள்ள நடிகை டாப்சி, இதை நாம் எதிர்ப்பார்க்கவே இல்லை. பாலிவுட் படக்கதைகள் தான்
நம்பமுடியாத கதை என்று சொல்வார்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com