\
சன்னி லியோனுடன் சதீஷ்: மும்பையில் நடைபெறும் ’ஓ மை கோஸ்ட்’படப்பிடிப்பு

சன்னி லியோனுடன் சதீஷ்: மும்பையில் நடைபெறும் ’ஓ மை கோஸ்ட்’படப்பிடிப்பு

சன்னி லியோனுடன் சதீஷ்: மும்பையில் நடைபெறும் ’ஓ மை கோஸ்ட்’படப்பிடிப்பு
Published on

'சிந்தனை செய்’ படப்புகழ் இயக்குநர் யுவன் இயக்கத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் - நடிகர் சதீஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. அதன்,புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2009 ஆண்டு வெளியான ‘சிந்தனை செய்’ படத்தில் வித்தியாசமான திரைக்கதையால் கவனம் ஈர்த்தார், அப்படத்தின் இயக்குநர் யுவன். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்து இப்போதுவரை தமிழகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ‘கதர்னாக்’, ’ரணம்’ உள்ளிட்டப் படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய யுவன் மீண்டும் தமிழில் ஹாரர் -காமெடி கலந்த ‘ஒ மை கோஸ்ட்’ படத்தை இயக்கிவருகிறார்.

இப்படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனியும் நடிகர் சதீஷும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின், படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கின்போது சன்னி லியோனுயுடன் சதீஷ் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com