actress shwetha menon case registered against over alleged obscene scenes in films
ஸ்வேதா மேனன்எக்ஸ் தளம்

ஆபாச படங்களில் நடித்ததாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு!

நடிகை ஸ்வேதா மேனன் மீது நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததாக எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Published on

மலையாளப் படங்களான ரதிநிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்து உச்சத்தைத் தொட்டவர், ஸ்வேதா மேனன். அவர், சமீபத்தில் கடந்த மாதம் வெளியான மலையாள த்ரில்லர் நாடகமான ஜான்கரில் நடித்திருந்தார். மேலும், அவரது அடுத்த படமான கரம் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.

actress shwetha menon case registered against over alleged obscene scenes in films
ஸ்வேதா மேனன்எக்ஸ் தளம்

இந்த நிலையில், நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அவர் நடித்ததாக எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் லாபம் ஈட்டும் நோக்கத்துடன் நிர்வாணத்தைக் கொண்ட படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததாகக் கூறப்படுகிறது. மலையாள செய்தி வலைத்தளமான மாத்ருபூமியின் அறிக்கையின்படி, மார்ட்டின் மெனச்சேரி என்ற சமூக ஆர்வலர் நடிகை மீது புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றம் உள்ளூர் போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர் மீது ஆபாசத்தைத் தடுக்கும் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். இந்தப் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு வேட்பாளர்களில், மூத்த நடிகர் ஜெகதீஷ் உட்பட நான்கு பேர் கடைசி தேதிக்கு முன்பாகவே தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

actress shwetha menon case registered against over alleged obscene scenes in films
பாட்டில் கேப் சேலஞ்ச்: களத்தில் குதித்த ஸ்வேதா மேனன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com