\
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி
Published on

நடிகை ஷில்பா ஷெட்டி இன்று தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

’கொரோனாவிலிருந்து, நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன’ என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்த நிலையில், மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, ஸ்புட்னிக் –வி தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இதனிடையே தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள மக்கள் சிலர் அச்சப்பட்டு தவிர்த்தும் வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர், அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com