வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்
வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்pt

”‘சாதி பெருமை பேசுகிறார்; அது தப்பு.. கவின் கொலை குறித்தும்..” - இன்ஸ்டா திவாகர் மீது ஷகிலா புகார்!

இன்ஸ்டாகிராம் பிரபலம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மீது நடிகை ஷகீலா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
Published on
Summary
  • நெல்லை கவின் கொலை குறித்து சாதி ரீதியில் பேசிய இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர்

  • நெல்லை ஐ டி ஊழியர் கவின் ஆணவக் கொலை குறித்து வாட்டர் மெலான் ஸ்டார் திவாகர் பேசியது என்னை கடுமையாக பாதித்தது - நடிகை ஷகிலா

  • வாட்டர் மெலன் ஸ்டார் சுதாகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகை ஷகிலா

வாட்டர் மெலன் ஸ்டார் மீது புகார்..

வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் திவாகர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர். நடிகர் சூர்யா, கஜினி திரைப்படத்தில் வாட்டர் மெலனை வைத்துக்கொண்டு ஸ்டைலாக நடித்த காட்சியை திவாகர் ரீ கிரியேட் செய்தார். இந்த காட்சி மூலம் பிரபலமடைந்தவர், தன்னை தானே வாட்டர் மெலன் ஸ்டார் என அழைத்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் சூரி சிறிய வேடங்களில் நடித்து, பெயிண்ட் வேலை செய்தவர் என்றும், தான் படித்தவர் என்பதால் அப்படி செய்ய மாட்டேன் என்றும் கூறினார். எனக்கு மிகபெரிய வேடங்கள் தான் வேண்டும் என பேட்டி கொடுத்திருந்தார். மேலும் தன்னை பார்த்து தான் வாட்டர் மெலன் காட்சியை சூர்யா படத்தில் மீண்டும் ரி கிரியேட் செய்ததாகவும் பேசிவந்தார்.

நடிகை ஷகிலா
நடிகை ஷகிலா

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஷகிலா, “திவாகர் என்பவர், சமீப காலமாக தான் சார்ந்த சமூகத்தை உயர்த்தியும் பிற சமூகத்தை தாழ்த்தியும் ஜாதிய ரீதியாக பேசி வருகிறார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனு அளித்தார்.

கவின் கொலையை நியாயப்படுத்துகிறார்..

நடிகை ஷகிலா அளித்த புகாரில் மேலும், நெல்லை ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் ஆணவக் கொலையை நியாயப்படுத்தி பேசியதாக திவாகர் மீது குற்றச்சாட்டு.

Youtube பிரபலம் ஜி.பி முத்து என்பவரை ஜாதி ரீதியாக குறிப்பிட்டு பொதுவெளியில் பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சாதி ரீதியாக பேசிய திவாகர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புகாரளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷகிலா, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சாதி பிரச்சனை பற்றி பேசுவது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை, அது நல்லதும் அல்ல. கவின் கொலை வழக்கில் கூட கொலை செய்தவர் என் ஜாதி என பேசுகிறார். ஆகவே, கொலை செய்வதை அவர் தூண்டுகிறார். அவர் செய்வதை யாராவது ஒருவர் முன் நின்று தடுக்க வேண்டும் அல்லது புகார்  அளிக்க வேண்டும் அதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன்.

திவாகர் மீது அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். சமூக  வலைதளங்களில் தராதரம் இல்லாத நபர்களை வளர்த்து விடுகிறோம். அதுதான் இது போன்ற பிரச்சனைக்கு காரணம்.

கவின் கொலை வழக்கு குறித்து அவர் பேசியது என்னை கடுமையாக பாதித்தது. அந்த வீடியோவில் அவர் பேசும்போது ஜாதி பார்த்து திருமணம் செய்தால் இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்காது என பேசுகிறார். காதல் என்பது ஜாதி பார்த்து வரக்கூடியதா? என கேள்வி எழுப்பினார்.

மற்றவர்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை, நான் வேலையில்லாமல் இருக்கேனோ என்னவோ புகார் அளிக்க வந்துள்ளேன் என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com