\
திருமணம் செய்ய மறுத்ததால் நடிகைக்கு கத்திக்குத்து: வில்லனாக மாறிய நண்பன்!

திருமணம் செய்ய மறுத்ததால் நடிகைக்கு கத்திக்குத்து: வில்லனாக மாறிய நண்பன்!

திருமணம் செய்ய மறுத்ததால் நடிகைக்கு கத்திக்குத்து: வில்லனாக மாறிய நண்பன்!
Published on

திருமணம் செய்ய மறுத்ததால், சீரியல் நடிகை மால்வி மல்கோத்ராவை அவரது நண்பரே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தி சீரியல் நடிகை மால்வி மல்ஹோத்ரா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  நேற்றிரவு, இவர் வடக்கு மும்பையின் வெர்சோவா பகுதியில் இருக்கும் கஃபேவுக்கு சென்றபோது, அவரது நண்பர் யோகேஷ் குமார் மகிபால் சிங் என்பவர், பின்தொடர்ந்து வந்து மால்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார்.

 மூன்றுமுறை அடி வயிற்றிலும், ஒருமுறை கைகளிலும் கத்தியால் குத்தப்பட்டு மால்வி படுகாயம் அடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், அவரை  மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது காப்பாற்றப்பட்டிருக்கிறார் மால்வி.  

போலீசாருக்கு அவர் அளித்த தகவலின்படி, கடந்த ஒரு வருடங்களாக மால்வி மல்ஹோத்ராவும், மகிபால் சிங்கும் நண்பர்களாக இருந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மல்ஹோத்ராவை மகிபால் சிங் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அடிக்கடி தொந்தரவு செய்யவே சிங்கிடம் பேசுவதை அவர் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com