\
ஷாருக்கான் - அட்லீ படத்தில் இணையும் ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா

ஷாருக்கான் - அட்லீ படத்தில் இணையும் ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா

ஷாருக்கான் - அட்லீ படத்தில் இணையும் ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா
Published on

ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தில் பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் நிலையில், மற்றொரு நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் அமீர்கானின் ‘டங்கல்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சான்யா மல்ஹோத்ரா இணைந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சான்யா மல்ஹோத்ரா அமீர்கானின் மகளாக ‘டங்கல்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், ‘பதாய் ஹோ’, ‘போட்டோகிராஃப் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் அபிஷேக் பச்சனின் ‘லூடோ’ மூலம் மேலும் கவனம் ஈர்த்து பாராட்டுக்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீ படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் சான்யா மல்ஹோத்ரா இணைந்தது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com