\
இமயமலை சுற்றுலாவை முடித்து வெளிநாடு கிளம்பிய சமந்தா

இமயமலை சுற்றுலாவை முடித்து வெளிநாடு கிளம்பிய சமந்தா

இமயமலை சுற்றுலாவை முடித்து வெளிநாடு கிளம்பிய சமந்தா
Published on

இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு நடிகை சமந்தா வெளிநாடு பயணம் சென்றுள்ளார்.

நடிகை சமந்தா கடந்த 2-ஆம் தேதி “நீண்ட ஆலோசனைக்கு பிறகு நானும், நாக சைதன்யாவும் கலந்து பேசி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து அவரவர் வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று அதிகாரபூர்வமாக விவாகரத்து குறித்து அறிவித்தார்.விவாகரத்துக்குப்பிறகு சமந்தா ”விவாகரத்து என்பது வலிமிகுந்தது. இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனால், தனது ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியுடன் இமயமலை அருகில் உத்தராகண்ட்டில் உள்ள ரிஷிகேஷிற்கு தனி ஹெலிகாப்டரில் சென்று அங்குள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்துக்குச் சென்று தங்கினார்.

அங்கிருந்த சாமியார்களுடன் பூஜையிலும் கலந்து வழிபாடு செய்தார். இந்த நிலையில், இமயமலை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது வெளிநாடு கிளம்பியுள்ளார். தனது மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா சிங் மற்றும் தனது புகைப்படக்காரர் ப்ரீதம் ஜூகல்கருடன் விமான நிலையத்தில் சமந்தா இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “வெளிநாடு செல்கிறோம்” என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். ஆனால், எந்த நாடு என்பதை குறிப்பிடவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com