”சமந்தா இந்த ஆண்டு குழந்தைப்பெற திட்டமிட்டிருந்தார்” -  ‘சாகுந்தலம்’ தயாரிப்பாளர் நீலிமா

”சமந்தா இந்த ஆண்டு குழந்தைப்பெற திட்டமிட்டிருந்தார்” - ‘சாகுந்தலம்’ தயாரிப்பாளர் நீலிமா

”சமந்தா இந்த ஆண்டு குழந்தைப்பெற திட்டமிட்டிருந்தார்” - ‘சாகுந்தலம்’ தயாரிப்பாளர் நீலிமா
Published on

”சமந்தா இந்த ஆண்டு குழந்தைப் பெறத் திட்டமிட்டிருந்தார் ” என்று சமந்தாவின் ’சாகுந்தலம்’ படத்தயாரிப்பாளர் நீலிமா குணா தெரிவித்துள்ளார்

நடிகை சமந்தா கடந்த 2015 ஆம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘ருத்ரமாதேவி’ இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் தற்போது ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ’குழந்தைப் பெற்றுக்கொள்ள சமந்தா விரும்பவில்லை” என்று சமந்தா விவாகரத்து அறிவிப்புக்குப்பிறகு வதந்திகள் பரவி வரும் நிலையில், ‘சாகுந்தலம்’ படத் தயாரிப்பாளர் நீலிமா குணா தி நியூஸ் மினிட்டுக்கு அளித்தப் பேட்டியில்,

“இந்த ஆண்டு இறுதியில் நடிகை சமந்தா நாக சைதன்யாவுடன் குழந்தப்பெற திட்டமிட்டிருந்தார். ‘சாகுந்தலம்’ படத்திற்காக நானும் எனது தந்தை குணசேகரும் சமந்தாவை அணுகியபோது அவருக்கு கதைப் பிடித்துவிட்டது. ஆனால், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா? என்று கேட்டு, ’நாங்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். தாயாக விரும்புவதிற்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். குழந்தைப் பிறந்தால் அதுதான் எனது உலகமாக இருக்கும்’ என்றார். அதோடு, ‘சாகுந்தலம்’ பீரியட் படம் முடிவடைய நீண்டகாலம் ஆகும் என்பதால், சமந்தா ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கையெழுத்திட பயந்தார். ஆனால், திட்டமிட்டப்படி படத்தை முடிப்போம் என்றபிறகே கையெழுத்திட்டார். இதுதான் அவரது கடைசிப்படம் என்றும் அதன்பிறகு நீண்ட இடைவெளி எடுத்து குழந்தைப்பெற விரும்புவதாக தெரிவித்தார். இதனால், நாங்கள் ஓய்வு எடுக்காமல் படத்தை சீக்கிரமாக முடிக்க உழைத்தோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com