’அழகே பொறாமை கொள்ளும் பேரழகு’: ‘சகுந்தலம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கவனம் ஈர்க்கும் சமந்தா

’அழகே பொறாமை கொள்ளும் பேரழகு’: ‘சகுந்தலம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கவனம் ஈர்க்கும் சமந்தா
’அழகே பொறாமை கொள்ளும் பேரழகு’: ‘சகுந்தலம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கவனம் ஈர்க்கும் சமந்தா

நடிகை சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

’புஷ்பா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்குப் பிறகு நடிகை சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சகுந்தலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தினை ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கி வருகிறார்.

மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.  நடிகர் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா அறிமுகம் ஆகும் இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  நீலிமா குணா, மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு ’சகுந்தலம்’ படத்தை வழங்குகிறார். 

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா ’அழகே பொறாமைக்கொள்ளும் பேரழகு’ என்னும் அளவிற்கு அசத்தலாக மான்களுக்கும் மயில்களுக்கும் நடுவில் கவனம் ஈர்க்கிறார். ‘சகுந்தலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com