\
சமந்தாவையும் அப்படி ஆக்கிட்டாங்களே?

சமந்தாவையும் அப்படி ஆக்கிட்டாங்களே?

சமந்தாவையும் அப்படி ஆக்கிட்டாங்களே?
Published on

அழகான நடிகைகளை எல்லாம் கொடூர மேக்கப் போட்டு பேயாக்கும் இயக்குனர்கள், இந்த முறை சமந்தாவையும் விட்டு வைக்கவில்லை. வருங்கால மாமனார் நாகார்ஜுனாவுடன் நடிக்கும் படத்தில் பேயாக நடிக்கிறாராம் சமந்தா.

அஸ்வின் பாபு, தன்யா பாலகிருஷ்ணா நடித்து 2015-ல் வெளியான தெலுங்கு படம், ராஜூ காரி காதி. ஓம்கர் இயக்கியிருந்த இந்த ஹாரார் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் நாகார்ஜுனா, சமந்தா, சீரத் கபூர் உட்பட பலர் நடிக்கிறனர். ஓம்கார் இயக்குகிறார். பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது. பொதுவாக நடிகைகள் எல்லோருக்கும் பேயாக நடிக்கும் ஆசை இருக்கும். இதை, த்ரிஷா உட்பட பல நடிகைகள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சமந்தாவுக்கும் அந்த ஆசை இருந்ததாம். அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது என்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com