சமந்தாவின் ‘யசோதா’: இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம்
நடிகை சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ தெலுங்கில் ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் நடிகை சமந்தா தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். ரொமாண்டிக் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்குகிறார்.இதற்கான, அறிவிப்பு விஜயதசமியை முன்னிட்டு வெளியானது. அதேதினத்தில், 5 மொழிகளில் சமந்தா நடிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பும் வெளியானது.
தற்போது அந்தப் படத்தின், படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார்கள். ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கிறது. தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம்,இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் உருவாகும் இப்படத்திற்கு ‘யசோதா’ என்று பெயரிட்டுள்ளார்கள். இதனை தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.