\
லவ் தி ‘இரும்புத்திரை’ ஆல்பம்: சமந்தா ட்விட்

லவ் தி ‘இரும்புத்திரை’ ஆல்பம்: சமந்தா ட்விட்

லவ் தி ‘இரும்புத்திரை’ ஆல்பம்: சமந்தா ட்விட்
Published on

லவ் தி ‘இரும்புத்திரை’ ஆல்பம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாயகன் விஷால், அவரது தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே.ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய விஷால் படம் தாமதமானதற்கு தான்தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும் யுவன் இசையை பாராட்டிப் பேசியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “லவ் தி ‘இரும்புத்திரை’ இசை ஆல்பம். அதற்காக இயக்குநர் மித்ரனுக்கும் கேமிராமேன் ஜார்ஜுக்கும் நடிகர் விஷாலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ‘அழகே’ பாடல் ஆல்பம் மிக அழகாக கொடுத்ததற்காக யுவனுக்கு நன்றி கூறியிருக்கும் அவர் மேலும் ஒருபடி தான் சினிமா உலகில் முன்னேறி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com