'பீஸ்ட்' படத்தின் 'அரபிக் குத்து' பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடிகை சமந்தா.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய 'அரபிக் குத்து' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து பிரபலம் அடைந்திருக்கிறது. மேலும் யூடியூபில் விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ் பாடலாகவும் இப்பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இப்பாடலில் வரும் நடிகர் விஜய்யின் துள்ளலான நடனம் அவரது ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் தற்போது அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஏர்போர்ட்டில் வைத்து அப்பாடலுக்கு ஆட்டம் போட்டு நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: 'ஆகஸ்டில் படப்பிடிப்பு: பொங்கலுக்கு ரிலீஸ்’: ’ரஜினி 169’ அப்டேட்