தனி ஹெலிகாப்டர் மூலம் இமயமலை சென்ற சமந்தா: ஆசிரமத்தில் வழிபாடு

தனி ஹெலிகாப்டர் மூலம் இமயமலை சென்ற சமந்தா: ஆசிரமத்தில் வழிபாடு
தனி ஹெலிகாப்டர் மூலம் இமயமலை சென்ற சமந்தா: ஆசிரமத்தில் வழிபாடு

தனி ஹெலிகாப்டர் மூலம் நடிகை சமந்தா மன அமைதிக்காக ரிஷிகேஷ் சென்றுள்ளார்.

நடிகை சமந்தா கடந்த 2-ஆம் தேதி “நீண்ட ஆலோசனைக்கு பிறகு நானும், நாக சைதன்யாவும் கலந்து பேசி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து அவரவர் வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று அதிகாரபூர்வமாக விவாகரத்து குறித்து அறிவித்தார்.

விவாகரத்துக்குப்பிறகு சமந்தா ”விவாகரத்து என்பது வலிமிகுந்தது. இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தனது ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியுடன் இமயமலை அருகில் உத்தராகண்ட்டில் உள்ள ரிஷிகேஷிற்கு தனி ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

அங்குள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்துக்குச் சென்று தங்கியுள்ளார்.

அங்குள்ள சாமியார்களுடன் சமந்தா பூஜையில் கலந்துகொண்ட வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com