‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை சமந்தா?
இந்திய சினிமா நடிகையான சமந்தா கடந்த டிசம்பரில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அந்தப் பாடலில் அவரது நடன அசைவுகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக யூடியூப் தளத்தில் வெளியாகியிருந்த இந்த பாடல் 20 மில்லியன் வியூஸ்களை இதுவரை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலில் தனது அசத்தல் ஆட்டத்திற்காக நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
3 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் டைம் லென்த் கொண்ட இந்த பாடலுக்கு அவர் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அவர் இந்த பாடலுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருந்தார் என்ற தகவல் வெளியானது.
“நான் இந்த பாடலில் நடனமாட காரணமே நடிகர் அல்லு அர்ஜூன்தான். இப்போது இந்த பாடல் தேசிய அளவில் வைரலாகி உள்ளது. அதற்காக நான் அல்லு அர்ஜூனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என சமந்தா தெரிவித்துள்ளார்.