சிவகார்த்திகேயனுடன் இணையும் சாய் பல்லவி

சிவகார்த்திகேயனுடன் இணையும் சாய் பல்லவி

சிவகார்த்திகேயனுடன் இணையும் சாய் பல்லவி
Published on

’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் நடிகை சாய் பல்லவி இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 25 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘டான்’ தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கில் வெற்றிபெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் படம், நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் ‘சிவகார்த்திகேயன் 21’ உள்ளிட்டப் படங்களில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவின் நடிப்பும் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் சாய் பல்லவி இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி தமிழில் கடைசியாக ‘பாவகதைகள்’ ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com