சினிமா
நடிகை ரியாவுக்கு ஜாமின் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்
நடிகை ரியாவுக்கு ஜாமின் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த வழக்கில் அவருடைய காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் போதைப்பொருள் பயன்பாட்டிற்காக ரியாவை செப்டம்பர் 9ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவர் ஜாமின் கேட்டு கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டது.
ரியா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுஷாந்தின் மரணம் கொலை அல்ல, தற்கொலைதான் என்று விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து ரியா சார்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் கோரியிருந்தனர்.
இந்நிலையில், இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளனர்.