\
’நவராத்திரி சுபராத்திரி’ பாடலுக்கு ராஷ்மிகாவுடன் ஆடிப்பாடும் ராதிகா..ஊர்வசி: வைரல் வீடியோ

’நவராத்திரி சுபராத்திரி’ பாடலுக்கு ராஷ்மிகாவுடன் ஆடிப்பாடும் ராதிகா..ஊர்வசி: வைரல் வீடியோ

’நவராத்திரி சுபராத்திரி’ பாடலுக்கு ராஷ்மிகாவுடன் ஆடிப்பாடும் ராதிகா..ஊர்வசி: வைரல் வீடியோ
Published on

நவராத்திரியையொட்டி நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகைகள் ராதிகா, ஊர்வசி நவராத்திரி பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகை ராஷ்மிகா நடிப்பில் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சர்வானந்த்தின் ‘ஆடவாலு மீக்கு ஜோகர்லு’ படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை ராதிகா, ஊர்வசி நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்திய மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பண்டிகை துவங்கியுள்ளதையொட்டி, ‘ஆண்டவாலு நீக்கு ஜோகர்லு’ படத்தில் நடிக்கும் ராதிகாவும் ஊர்வசியும் சிவாஜி கணேசனின் 100 வது படமான ‘நவராத்திரி’ படத்தின் ’நவராத்திரி சுபராத்திரி’ பாடலுக்கு இருவரும் ராஷ்மிகா மந்தனாவைப் பார்த்து எக்ஸ்பிரஷன் கொடுக்கும் வீடியோவை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

சிவாஜியின் 100வது படமாக வெளியான ‘நவராத்திரி’ படத்தில் 9 கதாபாத்திரங்களில் சிவாஜி நடிப்பில் மிரட்டியிருப்பார். அவருக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு நடிப்பில் கவனம் ஈர்த்தார் நடிகை சாவித்ரி. இதில், இடம்பெற்ற ’நவராத்திரி’ பாடலை முறியடிக்கும் மாதிரியாக மற்றொரு நவராத்திரி பாடல் இதுவரை கவனம் ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவைக் காண : https://twitter.com/realradikaa/status/1445995357289156610?s=20

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com