நிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்!

நிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்!

நிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்!
Published on

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது திருமணத்தை திடீரென நிறுத்தியுள்ளார் கன்னட ஹீரோயின் ராஷ்மிகா.

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா, ஜமக் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் விஜய தேவரகொண் டாவுடன் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு புகழ் கூடியது. வாய்ப்புகளும் குவிகின்றன. கடந்த மாதம் ரிலீஸ் ஆன இந்தப் படத்தில் அவர் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார்.

இதற்கிடையே இவரும் ’கிரிக் பார்ட்டி’ பட ஹீரோ ரக்‌ஷித்தும் காதலித்து வந்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த வருடம் ஜூலை மாதம் பெங்களூரில் பிரமாண்டமாக நிச்சயதார்த்த விழா நடந்தது. இதையடுத்து, திருமணம் நடக்க இருக்கிற நிலையில் இன்னொரு ஹீரோவுடன் ராஷ்மிகா நெருக்கமாக நடிக்கலாமா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் செய்தி வெளியா னது. இந்த செய்தி உண்மைதான் என்று இப்போது தெரியவந்துள்ளது. ராஷ்மிகா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் இதனால் இப்போது திருமணம் செய்துகொள்ளமுடியாது என்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கன்னட நடிகர் ரக்‌ஷித்தும் உறுதி செய்துள்ளார்.

ராக்‌ஷிதா, அடுத்து தேவதாஸ், டியர் காம்ரேட் ஆகிய தெலுங்கு படங்களிலும் எஜமானா, விருத்ரா ஆகிய கன்னட படங்களிலும் நடித்து வருகி றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com