\
விஷமாக மாறிய உணவு: மருத்துவமனையில் நடிகை ரம்யா அனுமதி

விஷமாக மாறிய உணவு: மருத்துவமனையில் நடிகை ரம்யா அனுமதி

விஷமாக மாறிய உணவு: மருத்துவமனையில் நடிகை ரம்யா அனுமதி
Published on: 

உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ரம்யா வீடு திரும்பினார்.

தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட சில படங்களில் நடித்தவர் கன்னட திவ்யா ஸ்பாந்தனா. இவர் ரம்யா என்ற பெயரில் தமிழில் நடித்துவந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்த இவர், கடந்த தேர்தலில் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதுபற்றி, அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் தீரஜ்காரந்த் கூறும்போது, ‘சிறப்பு மருத்துவக்குழு ரம்யாவுக்கு சிகிச்சை அளித்து வந்தது. ரம்யா சாப்பிட்ட உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டதில் விஷமாக மாறியிருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் ரம்யா வீடு திரும்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com