இலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா!

இலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா!

இலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா!
Published on

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். 

ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. கொச்சிக் கடை தேவாலயம், கட்டுவப்பிட்டிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இதில், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவ ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுதவிர ஷாங்ரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த  சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த தொடர் குண்டுவெடிப்பு அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார். இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


‘’சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்தது, அதிர்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நம்ப முடியவில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com