காதல் கணவரை பிரிந்தது ஏன்? ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்!

காதல் கணவரை பிரிந்தது ஏன்? ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்!
காதல் கணவரை பிரிந்தது ஏன்? ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்!
Published on

தமிழில், ‘வெயில்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரியங்கா. தொடர்ந்து தொ (ல்) லைபேசி, செங்காத்து பூமியிலே, தீயோற்கு அஞ் சேல் ஆகிய படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து வந்தார். பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டு திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் தமிழ் மற்றும் மலையாளத் திரைத் துறையினர் கலந்துகொண்டு  மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சென்னையில் குடியேறினார்கள். 

பின்னர் பிரசவத்துக்காக, திருவனந்தபுரம் சென்ற பிரியங்கா, அதன் பின் சென்னைக்குச் வரவில்லை. 2013 ஆம் ஆண்டு, ஆண் குழந்தை பிறந் தது. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, பிரியங்கா மனு தாக்கல் செய்தார். கணவருக்கு எதிராக, தனது சமூக வலைத்தள பக்கங்களை தவறாக பயன்படுத்தியது உட்பட 4 வழக்குகளை பதிவு செய்தார். குழந்தை முகுந்த் ராம், பிரியங்காவுடன் இருக்கிறான்.

இந்நிலையில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பிரியங்கா, தனது கணவரை பிரிந்தது ஏன் என்பது பற்றி இப்போது அதிர்ச்சி தகவலை வெளி யிட்டுள்ளார். அதாவது லாரன்ஸ், தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார் என்று கூறியுள்ளார். அதோடு, சினிமாவில் தன்னை மீண்டும் நடிக்க தடை விதித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

 ‘’எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். அதனால் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நல்ல கேரகர்கள் கிடைத்தால் நடிப்பேன்’’ என்று தெரிவித் துள்ளார். பிரியங்காவின் இந்த தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com